Sunday, 19 November 2017

கடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்


குருசாமி எம்என்.நம்பியார் அவர்கள் மறைந்த அந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடந்த 2009 ம் வருடம் சென்னை பதிப்பு தினமலர் வார மலருக்காக நாம் எழுதியிருந்த கட்டுரை. கடந்த 2008 ம் வருடம் மார்ச் 7 ம் தேதியன்று அவரது பிறந்த தினத்தையொட்டி இதே சென்னை பதிப்பு தினமலர் வார மலருக்காக அவரிடம் இறுதியாக பேட்டி கண்ட பாக்கியத்தை பெற்ற நாம் அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கட்டுரை எழுதும் பாக்கியத்தை பெற்றதை நாம் பெற்ற பெரும்பேறாக கருதுகிறோம். ஆர்.கோவிந்தராஜ்குருசாமி எம்என்.நம்பியார் அவர்கள் குறித்து தினமலர் திருச்சி பதிப்பு வார மலரில் 2008 ம் வருடம் ஏப்ரல் மாதம் நாம் எழுதியிருந்த கட்டுரையை குருசாமி அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இங்கு பதிவு செய்கிறேன். ஆர்.கோவிந்தராஜ்தமிழ் திரையுலகில் சுமார் 70 ஆண்டுகள் தனது தனி நடிப்பு திறமையால் கம்பீரமாக வலம் வந்து வெற்றிக்கொடி நாட்டிய அப்பழுக்கற்ற ஆன்மிக செம்மலான குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு { கடந்த 2007 ம் ஆண்டு மார்ச் மாதம் 7 ம் தேதி } சென்னை பதிப்பு தினமலர் வார மலருக்கான நேர்காணல் ஒன்றிற்காக அவரிடம் கேட்டிருந்தேன். அதற்கு அவர் பொதுவாக பத்திரிக்கைகளுக்கு அவ்வளவாக பேட்டி கொடுப்பதில்லை.பரவாயில்லை நீ நம்ப ராமகிருஷ்ணன் மகன் என்பதால் உங்கப்பாவுக்காக உன்னிடம் கொஞ்சம் சொல்கிறேன் என்று கூறி தனது உடல்நலம் சரியில்லாத அந்த சூழலிலும் எனக்கு பேட்டி கொடுத்தார். அவர் அப்போது கூறிய சிறு தகவல்களை தினமலருக்கு அனுப்ப பின் அது வாரமலரில் பிரசுரமானது. அவர் இறுதியாக அளித்த பேட்டி என்னிடமே என்பதால் அந்த நிகழ்வை நான் எனது பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன். இன்று குருசாமி எம்என்,நம்பியார் அவர்களது பிறந்தநாளை {19 -11 17 }முன்னிட்டு அவர் நினைவை போற்றும் வகையில் இங்கு அந்த கட்டுரையை பதிவு செய்வதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். அன்புடன் --கோவிந்தராஜ்

தனது தனி நடிப்பால் தமிழ் திரையுலகில் சுமார் 70 ஆண்டுகள் கம்பீரமாக வலம்வந்த அப்பழுக்கற்ற ஆன்மிக செம்மல்-- பாமர மக்களும் சபரிமலை செல்ல காரணகர்த்தாவாக இருந்த தனிமனித ஒழுக்க நேர்மையாளர்- ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலை சென்று இறுதியில் தனது 88 வயதில் இந்நாளில் ஐயப்ப ஸ்வாமியிடமே தன்னை ஐக்கிய படுத்தி கொண்ட மனித புனிதர் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது நினைவு தினம் இன்று. { 19 -11 -17 .}


Wednesday, 6 September 2017

                        


                                     எம்ஜிஆருக்காக தியானத்தில் ஈடுபட்ட நம்பியார்.  

திரைப்பட துறையில் எம்ஜிஆரின் உற்ற தோழர் என்றால் அது எம் என் .நம்பியார் அவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.இருவரும் ஒருவரையொருவர் ஒருமையில் அழைக்கும்  அளவிற்கு ஆழ்ந்த நட்புடன் பழகியவர்கள். அப்படியிருக்கையில் எம்ஜிஆர் மறைந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்த நம்பியார் வராமல் போனதற்கு அவர் மீது   விமர்சனங்கள் வைக்கப் பட்டது


உண்மையில் நடந்தது என்னவென்றால்--- நம்பியார் அப்போது சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தார்.அவருடன் நூற்றுக்கணக்கானவர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர் குறிப்பாக  முக்கிய பிரமுகர்கள் பலரும் அண்டை மாநிலத்தை சேர்ந்த பல முக்கியஸ்தர்களும் அவருடன் செல்கின்றனர். நம்பியார் சபரிமலைக்கு செல்லாது போனால் அனைவரும் செல்ல முடியாததாகிவிடும். இந்த சூழ்நிலையில் எம்ஜிஆர் இயற்கை எய்திய செய்தி கிடைத்தவுடன் ஒருகணம் ஆடிப்போனார் நம்பியார் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்க்கே சில நிமிடங்கள் பிடித்தது


உடனே தனக்கு மனைவி ருக்மணி அம்மையாரை அழைத்த நம்பியார் யார் வந்தாலும் என்னை அழைக்க வேண்டாம் எனக்கூறி மாடியிலுள்ள அறைக்கு சென்று எம்ஜிஆரின் புனித ஆத்மா மோட்சம் பெற தியானத்தில் ஈடுபட்டார்.ஒருநாள் முழுவதும் அவர் அறையை விட்டு வெளி வரவில்லை.உணவின்றி தூக்கம் இன்றி எம்ஜிஆரை நினைத்தபடி தியானத்தில் ஈடுபட்டார் நம்பியார். அதன்பின்னரும் அவர் சகஜ நிலைக்கு வருவதற்க்கே ஒருவார காலம் பிடித்தது.வெளி உலகத்திற்கு தெரியாத நிகழ்வு இது.என் போன்ற அவருடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.கேபி.ராமகிருஷ்ணன்.                                                                                                                                                                                                            
 எம்ஜிஆரின் பாதுகாவலர்.